LATEST NEWS
“நான் என்ன 24 மணி நேர ஆஸ்பத்திரியா..?” எங்களுக்கும் பர்சனல் லைஃப் இல்லையா..? நள்ளிரவில் கதவைத் தட்டிய செக்யூரிட்டி… கொதித்த மருத்துவரின் வைரல் ட்வீட்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு நள்ளிரவு 11.06 மணியளவில் அழைப்பு வந்தது. பக்கத்து டவரில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, அங்கிருந்த செக்யூரிட்டி வந்து அவரது கதவைத் தட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை விவரித்து அந்த மருத்துவர் இணையத்தில் வெளியிட்ட பதிவு, தற்போது நெட்டிசன்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அந்தப் பதிவில் அவர், “குடியிருப்புப் பகுதி என்பது எனது தனிப்பட்ட இல்லமே தவிர, அது 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையோ அல்லது அவசர சிகிச்சைப் பிரிவோ கிடையாது. இது போன்ற நள்ளிரவு அவசரக் காலங்களில், தனிப்பட்ட முறையில் வீட்டில் இருக்கும் மருத்துவர்களைத் தேடி வருவதை விட்டுவிட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்புகொள்வதே சரியான வழி” என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.
மருத்துவரின் இந்த அறிவாளித்தனமான கருத்துக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. “மருத்துவத் தொழில் என்பது சேவை மனப்பான்மை கொண்டது, அவசர நேரத்தில் உதவ மறுப்பது சரியல்ல” என்று ஒரு தரப்பினர் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், “மருத்துவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஓய்வு நேரம் தேவை, அவர்களின் உரிமைகளுக்கும் அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்” என்று மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
