“அடச்சீ நீயெல்லாம் அப்பாவா..? மகளையே பலிகடா ஆக்கிய பெத்த தந்தை..!” 2 வது மனைவியுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்… 2 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு…!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் அப்பாவா..? மகளையே பலிகடா ஆக்கிய பெத்த தந்தை..!” 2 வது மனைவியுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்… 2 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கிரண் ஆகியோருக்கு, சொந்த மகளையே கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ராஜேஷ், வளர்ப்புத் தாயான கிரணும் சேர்ந்து தனது சொந்த மகள் சுவேதாவைக் கொடூரமாகப் படுகொலை செய்தார். இந்தத் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சுவேதாவின் தாய்வழி தாத்தா காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்து சட்டப் போராட்டம் நடத்தி வந்தார்.

இந்தக் கொடூரக் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தடயங்கள் மற்றும் சாட்சியங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குற்றவாளிகளான ராஜேஷ் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதன் மூலம் உயிரிழந்த சிறுமி சுவேதாவிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் வாயிலாக நீதி கிடைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in