LATEST NEWS
இதைவிட பெரிய சந்தோசம் என்ன இருக்குது..? “பெரிய ட்ரெயின்ல போறோம் பாட்டி.! 85 வயது பாட்டியின் முதல் விமானப் பயணம்… இணையத்தை நெகிழ வைத்த பேத்தியின் அன்பு..!!
மும்பையைச் சேர்ந்த ஈஷா என்ற பெண், தனது 85 வயது பாட்டியை முதன்முறையாக விமானத்தில் கோவாவுக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமத்தைத் தாண்டி எங்குமே செல்லாத தனது பாட்டிக்கு இந்த மறக்க முடியாத அனுபவத்தைப் பரிசளிக்க விரும்பிய ஈஷா மற்றும் அவரது குடும்பத்தினர், அவரை விமானத்தில் அழைத்துச் செல்லத் திட்டமிட்டனர். இந்த மறக்க முடியாத பயணத்தின் அழகான தருணங்களை ஈஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விமான நிலையத்திற்குச் செல்லும்போது ஈஷா தனது பாட்டியிடம் “நாம் ஒரு பெரிய ரயிலில் செல்லப் போகிறோம்” என்று செல்லமாகக்கூற, விமானத்தைக் கண்ட பாட்டி “இது ரயில் அல்ல, விமானம்” என்று சட்டென்று கண்டறிந்து பதிலளித்தார். விமானம் விண்ணில் உயரப் பறக்கத் தொடங்கியதும், சிறு குழந்தையைப் போல மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து நடனமாடியபடி பாட்டி அந்தப் பயணத்தை ரசித்து அனுபவித்தார். ராஜ மரியாதை கிடைத்த மகிழ்ச்சியில் பாட்டி காட்டிய உற்சாகமும் குறும்புத்தனமும் அனைவரையும் கவர்ந்தது.
https://www.instagram.com/reel/DbxtVv2Mck-/?utm_source=ig_web_button_share_sheet
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, திரளான இணையவாசிகள் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “இதுபோன்ற அழகான மற்றும் மனதை நெகிழவைக்கும் வீடியோக்களைப் பார்ப்பதற்காகவே நான் இணையப் பேக் போடுகிறேன்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மேலும் பல பயனர்கள் இந்த வீடியோவைப் பார்த்ததும் தங்களது பாட்டிகளின் நினைவுகள் வந்துவிட்டதாக உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளனர்.
