“அட கொடுமையே.. ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை நோட்டமிட்ட அசுர கும்பல்..!” 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர கூட்டு பாலியல் வன்கொடுமை… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அட கொடுமையே.. ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை நோட்டமிட்ட அசுர கும்பல்..!” 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர கூட்டு பாலியல் வன்கொடுமை… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த 16 வயது சிறுமியை நோட்டமிட்டுப் பின்தொடர்ந்த கும்பல், அவருக்குக் கூட்டுப் பாலியல் தொல்லை அளித்த திடுக்கிடும் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி பாட்டி ஊர் கோவில் திருவிழாவிற்குச் சென்ற அந்தச் சிறுமியை, அவரது ஆண் நண்பரான சந்தோஷ் (24) என்பவர் ஆசை வார்த்தை கூறித் தனியாக அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட அரவிந்த் (20), ஆறுமுகம் (18) மற்றும் 17, 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என நான்கு பேர் கொண்ட கும்பல், அவர்களைப் பின்தொடர்ந்து சென்று சந்தோஷை மிரட்டி விரட்டியுள்ளனர். பின்னர், அந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமிக்குக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, இதைப்பற்றி வெளியே சொன்னால் காதலனைப் பற்றி வீட்டில் கூறிவிடுவோம் என்றும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.

வீடு திரும்பிய சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த அவரது தாய் தீவிரமாக விசாரித்த போதுதான் இக்கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விறுவிறுப்பாகச் செயல்பட்ட போலீஸார் சிறுமியை ஏமாற்றிய ஆண் நண்பர் சந்தோஷ் மற்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரவிந்த், ஆறுமுகம் உட்பட 5 பேரையும் அதிரடியாகப் பிடித்து விசாரணை நடத்தினர். தற்பொழுது, கூட்டுப் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து பேர் மீதும் மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in