DISTRICT NEWS
“ஐயோ என்ன கொடுமை!.. கழிப்பறையில பாத்திரம் கழுவுங்க..” தஞ்சை அரசு மருத்துவமனையில் நேர்ந்த கொடூரம்… கொதித்தெழும் பொதுமக்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் உதவியாளர்களிடம் அங்கிருந்த கழிப்பறையிலேயே பாத்திரங்களைக் கழுவுமாறு பணியாளர்கள் கூறியதாகச் சொல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Thanjavur Medical College staff allegedly asked people to wash utensils in the toilet. Video goes viral.
Share it Maximum.. pic.twitter.com/q7nq9OTSQ7— India247_News (@IndiaDecodedd) July 27, 2026
கழிப்பறையின் சுகாதாரமற்ற சூழலில் மக்கள் பாத்திரங்களைக் கழுவும் இந்த அவலக் காட்சி, சமூக ஆர்வலர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நோயாளிகளின் நலனுக்காகச் செயல்பட வேண்டிய மருத்துவமனையிலேயே இத்தகைய சுகாதார சீர்கேடு நிலவுவது குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
