LATEST NEWS
திடீர் டுவிஸ்ட்..! “பதவி பறிப்பு இல்லை ஆனால்” -அமைச்சர் கீர்த்தனாவுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்… CM விஜய் அதிரடித் திட்டம்…!!
தமிழகத்தில் நடைபெற்று வரும் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனது அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . தொடக்கத்தில், போதிய நிர்வாக அனுபவம் இல்லாததால் அமைச்சர்கள் கீர்த்தனா, கில்லி சரத்குமார் உள்ளிட்ட சிலரது பதவிகள் முற்றிலுமாகப் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பின . ஆனால், தற்போதைய புதிய நிலவரப்படி, அவர்களைப் பதவியிலிருந்து நீக்குவதற்குப் பதிலாக முக்கியத்துவத்தைக் குறைத்து வேறு துறைகளுக்கு மாற்ற முதலமைச்சர் விஜய் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது .
குறிப்பாக, தமிழகத்தின் மிக முக்கியத் துறைகளில் ஒன்றான தொழில்துறையை நிர்வகிக்க அமைச்சர் கீர்த்தனா சிரமப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து , அவரிடமிருக்கும் அந்தத் துறை பறிக்கப்படவுள்ளது. அதற்குப் பதிலாக, தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கட்சியின் முக்கியத் தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஆதவ் அர்ஜுனாவிடம் இத்தொழில்துறை ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன . சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடியும் தருவாயில் உள்ளதால், இந்த அதிரடி அமைச்சரவை மாற்றப் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
