LATEST NEWS
“மகள் அனுப்பிய ஒரே ஒரு ‘I Miss You’ மெசேஜ்..!” 28 மணி நேரம் பயணம் செய்து அதிகாலையில் வீட்டு வாசலில் நின்ற தந்தை… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
சமூக ஊடகங்களில் தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான ஆழமான மற்றும் அன்பான உறவை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. “மகள்கள் எப்போதும் தந்தையின் செல்லப் தேவதைகள்” என்று கூறப்படும் வார்த்தையை ஒரு தந்தை நிஜமாக்கி காட்டியுள்ளார். எந்தவொரு பெரிய அவசர சூழலும் இல்லாதபோதிலும், தனது மகளின் ஒரு சிறிய குறுஞ்செய்திக்காக மைல்கள் கடந்து பயணம் செய்து, அதிகாலையிலேயே தன் மகளின் வீட்டு வாசலில் வந்து நின்றுள்ளார் அந்தத் தந்தை.
இன்ஸ்டாகிராம் பயனர் கைவல்யா என்பவர் இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், முந்தைய நாள் இரவு அவர் தனது தந்தைக்கு “ஐ மிஸ் யூ பாபா!” என்று அனுப்பிய மெசேஜின் ஸ்கிரீன்ஷாட் காட்டப்பட்டுள்ளது. மகளின் இந்த மெசேஜைப் பார்த்தவுடனே தந்தை மனம்பொறுக்க முடியாமல் கிளம்பி, அடுத்த நாள் காலையிலேயே மகளின் வீட்டின் முன்பாக நேரில் வந்து நின்று அவருக்கு ஆச்சரியம் அளித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DcrIOuSyj8f/?utm_source=ig_web_button_share_sheet
தந்தையும் மகளும் சந்தித்துக் கொண்ட இந்த அழகான தருணத்தின் பின்னணியில் உள்ள தந்தையின் அர்ப்பணிப்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மகளுடன் வெறும் 8 மணி நேரம் மட்டுமே செலவிட முடிந்தது என்றாலும், அந்தச் சிறிய சந்திப்பிற்காக அவர் மொத்தம் 28 மணி நேரம் நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வளவு நீண்ட பயணக் களைப்பு இருந்தபோதிலும், அவர் ஓய்வெடுக்காமல் மகளின் வீட்டு வேலைகளுக்கு உதவியதுடன், அவருடன் நகரத்தை சுற்றிப் பார்க்கவும் சென்றுள்ளார். தன் வாழ்வில் என்ன நடந்தாலும் மகளின் மகிழ்ச்சியே மிகவும் முக்கியம் என்பதை உணர்த்த வந்த தந்தையின் இந்த வீடியோ சமூக வலைதளவாசிகளின் இதயங்களை உருக்கியுள்ளது.
