LATEST NEWS
“கொஞ்சம் என்னைப் பார்த்துப் பேசுங்க அனிதா ராதாகிருஷ்ணன்” – பேரவையில் மாற்று சபாநாயகர் சத்யபாமா போட்ட கமெண்ட்… குலுங்கி குலுங்கிச் சிரித்த MLA-க்கள்..!!
தமிழக சட்டப்பேரவையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் விவாதித்துக் கொண்டிருந்த போது அவையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. அவர் தனது கோரிக்கைகளை முன்வைத்து, சம்பந்தப்பட்ட அமைச்சரின் முகத்தைப் பார்த்தபடி தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திக் கொண்டிருந்த மாற்றுப் பேரவைத்தலைவர் சத்யபாமா, குறுக்கிட்டு, “அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே, கொஞ்சம் என்னைப் பார்த்து பேசுங்க” என்று நகைச்சுவையாகக் கூறினார். இந்த எதிர்பாராத பேச்சைக் கேட்டு அவையிலிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குலுங்கி குலுங்கிச் சிரித்தனர். இதனால் விவாதக் களமாக இருந்த சட்டப்பேரவை வளாகம் சிறிது நேரம் கலகலப்பாக மாறிச் சிரிப்பலையில் மூழ்கியது.
