“கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அடியோடு வாபஸ்..!” சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அடியோடு வாபஸ்..!” சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!

Published

on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளைத் தள்ளுபடி செய்து அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கடந்த 2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையிலான திமுக ஆட்சியில் போடப்பட்ட ஏராளமான வழக்குகள் தற்பொழுது முழுமையாக வாபஸ் பெறப்படுகின்றன. குறிப்பாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், நியாயமான கோரிக்கைகளுக்காக ஜனநாயக முறையில் போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் அடியோடு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், செய்யார் சிப்காட் திட்டத்திற்கு எதிராகப் போராடியதற்காகப் பழிவாங்கும் நோக்கில் விவசாயிகள் மீது பாய்ச்சப்பட்ட கொடூரமான குண்டர் சட்டம் உள்ளிட்ட மனிதநேயமற்ற வழக்குகள் அனைத்தும் இந்த புதிய அறிவிப்பின் மூலம் உடனடியாக வாபஸ் பெறப்படுகின்றன. “கடந்த 5 ஆண்டுகளில் ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட அறப்போராட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்வதோடு, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் முழங்கியுள்ளார். எளிய மக்களின் குரவளையை நசுக்கும் விதமாகப் போடப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ள முதலமைச்சரின் இந்த அதிரடி டிஜிட்டல் கார்டு செய்தி தற்பொழுது தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று இணையத்தில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in