LATEST NEWS
“ஆபீஸ்ல என்ன மலையையா தூக்குன..?!” ஓவர்டைம் வேலை செஞ்சுட்டு வந்த கணவனை மனைவி வறுத்தெடுத்த கொடூரம்.. இணையத்தில் வெடித்த விவாதம்..!!
காலை 8 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பினாயே, இவ்வளவு நேரமாக எங்கே போயிருந்தாய்? ஆபீஸில் என்ன மலையையா தூக்கி சுமந்தாய்? என்று இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த கணவனை நோக்கித் துளியும் இரக்கமின்றி மனைவி அடுக்கடுக்கான வசவு மொழிகளைப் பொழிந்த இந்த நெஞ்சை உலுக்கும் தத்துவக் கதை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பலரது சிந்தனையையும் தூண்டித் தீயாய்ப் பரவி வருகிறது. “நீதானே என்னிடம் கூடுதல் நேரம் வேலை செய்யச் சொன்னாய்” என்று அந்தப் பாசக்காரக் கணவன் தன் மனதிற்குள் நினைத்துக் கலங்கிய போதிலும், அவளது பணத்தாசை அடங்காமல், “உன் பணம் உன்னோடு போகட்டும், எனக்கு என்ன வந்துச்சு? உன்னை மாதிரி ஒரு ஏழையைக் கட்டிக்கிட்டு என் ஆசைகள் எதுவும் நிறைவேறாமல் வாழும் நான்தான் துரதிர்ஷ்டசாலி” என்று மிகக் கேவலமாக அவமதித்துள்ளார். கணவனின் கண்களில் கண்ணீர் முட்டிய போதும் நிறுத்தாத அந்தப் பெண், “என்னை விவாகரத்து செய்துவிடு, உன்னை விட ஆயிரம் மடங்கு சிறந்தவனை என்னால் தேடிக்கொள்ள முடியும்; போய் உன் சாப்பாட்டை நீயே சமைத்துத் தின்னு” என்று கூறி அவனது ஆண்மையையும், உழைப்பையும் நடுத்தெருவில் வீசியுள்ளார்.
A husband in Greater Noida arrived home at around 1 a.m. after working overtime. He had left for work at 8 a.m.
As soon as he entered the house, his wife angrily said, “You left at 8 a.m., how come you’re so late? Were you moving mountains at the office?”
The husband thought to… pic.twitter.com/QtpJdst8HI— Shweta Sharma (@ShwetaSharma236) September 1, 2026
வெளியில் நடக்கும் அத்தனை அவமானங்களையும், பிரச்சினைகளையும் எதிர்த்துப் போராடிவிட்டுத் தனது குடும்பப் பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற இரவும் பகலும் உழைக்கும் ஒரு கணவன், வீட்டிற்குத் திரும்பும் போது அன்பையும் கொஞ்சம் நிம்மதியையும் மட்டுமே எதிர்பார்க்கிறான். ஆனால், தன் சொந்த வீட்டிலேயே அவனுக்குக் கிடைப்பது ஏளனமும், அவமானமும், ‘நீ எதற்கும் லாயக்கற்றவன்’ என்ற உணர்வும் மட்டும்தான் என்றால், அவன் உள்ளுக்குள் முற்றிலும் சுக்குநூறாக உடைந்து போவான். ஒரு திருமண பந்தம் என்பது வெறும் பணத்தையும் பொறுப்புகளையும் மட்டுமே சார்ந்தது அல்ல; பரஸ்பரப் புரிதல், மரியாதை மற்றும் ஒரு சில ஆறுதலான அன்பான வார்த்தைகள் மட்டுமே அந்தப் பந்தத்தை மேலும் பலப்படுத்தும் என்பதை தோலுரித்துக் காட்டும் இந்த வாழ்வியல் தத்துவம் தற்பொழுது சோசியல் மீடியாவில் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது.
