LATEST NEWS
“என்னப்பா இது..! எக்ஸ்ட்ரா ஸ்மோக் ஃப்ளேவரா..?”பாவ் பாஜி ஆர்டர் பண்ணா… ஃப்ரீயா பீடி கொடுத்திருக்காங்க… ரூ.100 கூப்பன் கொடுத்து சமாளிக்கப் பார்த்த Zomato-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!
பெங்களூரைச் சேர்ந்த பிரியம் தஹாபில்தார் என்பவர், ‘சோமோட்டோ’ செயலியில் பாவ் பாஜி ஆர்டர் செய்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சாதாரண உணவாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஆர்டர் செய்த உணவின் பேக்கிங்கை அவர் திறந்தபோது, பாவ் பாஜியுடன் சேர்த்து வைக்கப்பட்டு இருந்த வெட்டப்பட்ட வெங்காயத்தின் மேல், பிடித்துப் போட்ட பீடி ஒன்று இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதை புகைப்படமாக எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.
அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த பிரியம் தஹாபில்தார், “சோமோட்டோவில் பாவ் பாஜி ஆர்டர் செய்தேன், அதற்கு இலவசமாக ஒரு பீடி கிடைத்துள்ளது. ஆனால் அது ஏற்கனவே முழுமையாகப் பிடித்துப் போட்டது. நேர்மையாகச் சொன்னால், இது நான் விரும்பிய வகையான இலவசப் பரிசு அல்ல” என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து அவர் புகார் அளித்த பிறகு, சோமோட்டோ வாடிக்கையாளர் சேவை மையம் அவரைத் தொடர்புகொண்டு, அவரது அடுத்த ஆர்டருக்கு ரூ.100 கூப்பனை சலுகையாக வழங்கியதாகப் பின்னர் புதுப்பித்து எழுதியிருந்தார்.
https://in.linkedin.com/in/priyam-tahabilder?trk=public_post_embed_feed-actor-name
இந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பயனர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் உணவகத்தின் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்து கேள்வி எழுப்பிய நிலையில், சிலர் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டனர். ஒரு பயனர் “கூடுதலாகப் புகைச் சுவை சேர்க்கப்பட்டுள்ளது” என்றும், மற்றொருவர் “சோமோட்டோ உணவை டெலிவரி மட்டுமே செய்கிறது, சமைப்பதோ பேக் செய்வதோ இல்லை; எனவே உணவகத்தின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினர்.
