LATEST NEWS
“பெரிய பெரிய பிராண்டுகளே தோத்துடும் போலயே…” கையாலேயே ஐபோன் கவர் செய்த காலணி செய்யும் தொழிலாளி… யாரு சாமி இவரு..? மிரண்டு போன இணையவாசிகள்..!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், சிறிய கடை வைத்துள்ள ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ஐபோனுக்காகத் தோலினால் மிக நேர்த்தியான கவர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பிராண்டட் போன் கவர்களை விட, இவர் கைவினைப் திறனால் உருவாக்கிய இளஞ்சிவப்பு நிற லெதர் கவர் மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது. போனின் கேமரா பகுதி உட்பட அனைத்து இடங்களுக்கும் மிகத் துல்லியமாகப் பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 48,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது. செருப்பு தைக்கப் பயன்படுத்தும் எளிய பாரம்பரியக் கருவிகளைக் கொண்டே இவர் இந்த கவரை உருவாக்கியிருந்தாலும், இதன் ஃபினிஷிங் மற்றும் துல்லியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கவரைத் தயாரித்து போனில் பொருத்திய பிறகு, அந்த தொழிலாளியின் முகத்தில் தோன்றும் புன்னகை நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/reel/DbRO13dPy2A/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த தொழிலாளியின் வறுமை மற்றும் எளிய பின்னணியைக் கடந்து அவரது திறமையைப் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். “தொடக்கத்தில் இது எப்படி வரப்போகிறது என்று யோசித்தோம், ஆனால் இறுதியில் உருவான கவர் உண்மையிலேயே அற்புதம்” என்று பலரும் கருத்து தெரிவித்து, பெரிய பிராண்டுகளையே தோற்கடிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கைவினைப் கலைக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
