ஐயோ இது என்ன கொடுமை.. வகுப்பறை கதவை திருத்த மாணவர்களுக்கு அதிர்ச்சி..சமையலர் மகளுக்கு நேர்ந்த கொடூரம் .. கதறி துடிக்கும் தாய்.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ இது என்ன கொடுமை.. வகுப்பறை கதவை திருத்த மாணவர்களுக்கு அதிர்ச்சி..சமையலர் மகளுக்கு நேர்ந்த கொடூரம் .. கதறி துடிக்கும் தாய்.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் சிவோனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மது யாதவ் என்ற சிறுமி வகுப்பறை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அந்தச் சிறுமி அதே அரசுப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வரும் பெண்ணின் மகள் என்பது தெரியவந்துள்ளது. காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதாக வீட்டிலிருந்து கூறிவிட்டுச் சென்ற சிறுமி, வகுப்பறைக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அனைவரையும் உரைய வைத்துள்ளது.

सरकारी स्कूल में एक मधु यादव नाम की लड़की की लाश क्लास में पंखे से लटकी मिली है। लड़की स्कूल की रसोइया की बेटी है। घर से स्कूल की कहकर निकली थी। सुबह क्लास में जब बच्चे पहुँचे तब उन्होंने पंखे से लटका देखा था।
📍सिवनी (मध्य प्रदेश) pic.twitter.com/P2Mqrw16bQ— Madan Mohan Soni (@madanmohansoni) August 12, 2026

காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறை கதவைத் திறந்தபோது, சிறுமி மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாகப் பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் மரணத்திற்கான காரணம் தற்கொலையா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் சதிச் செயல் உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in