அடக்கடவுளே..! “ஹோட்டல் தாஜில் அலறல் சத்தம்..!” மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொன்று தந்தை செய்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே..! “ஹோட்டல் தாஜில் அலறல் சத்தம்..!” மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொன்று தந்தை செய்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

பெங்களூரைச் சேர்ந்த இம்ரான் என்பவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு மற்றும் அவர் மீதான சந்தேகத்தின் காரணமாக, தனது இரு மகள்களான ஷேக் ஜோயா மற்றும் ஷேக் ஜஹ்ரா ஆகியோரை விடுதி அறை ஒன்றில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெங்களூரு பிலால் நகரைச் சேர்ந்த இவர், ஒரு கேப் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இரு மகள்களுடன் ஹோட்டல் தாஜ்-இல் அறை எடுத்துத் தங்கியுள்ளார். மறுநாள் திங்கள்கிழமை மாலை அறை ஊழியர்கள் கதவைத் தட்டியும் பதிலில்லாததால், பாதுகாப்புக் குழுவினரின் உதவியோடு கதவைத் திறந்து பார்த்தபோது, இரு சிறுமிகளும் சடலமாகப் படுக்கையில் கிடந்துள்ளனர்.

அங்கிருந்த இம்ரான் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மணிப்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தறபோது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காவல்துறை ஒரு தற்கொலை குறிப்பைக் கைப்பற்றியுள்ளது. அதில், தனது மனைவியுடன் நிலவி வந்த குடும்பப் பிரச்சினை மற்றும் மனைவியின் மீது எழுந்த நடத்த சந்தேகமே இந்த கொடூர முடிவுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in