பாவம் அந்த புள்ளைங்க… காதல் திருமணம் செய்த ஐடி பெண் ஊழியர் தற்கொலை… தவிக்கும் ரெண்டரை வயது இரட்டை குழந்தைகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாவம் அந்த புள்ளைங்க… காதல் திருமணம் செய்த ஐடி பெண் ஊழியர் தற்கொலை… தவிக்கும் ரெண்டரை வயது இரட்டை குழந்தைகள்..!!

Published

on

சாதி மறுப்பு திருமணம் செய்து சமுதாய எதிர்ப்பையும் மீறி வாழ்ந்து வந்த இளம் பெண், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஹைதராபாத் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவளது இரண்டரை வயது இரட்டை குழந்தைகள் தாயை இழந்து தவிக்கின்றனர்.

ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த மௌனிகா சந்தோஷி (28) மற்றும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரமாகாந்த் ஆகிய இருவரும் ஹைதராபாத் கட்கேசர் பகுதி போச்சாரம் டிவிஷனில் உள்ள கேலக்ஸி டவர்ஸில் தங்களது இரண்டரை வயது இரட்டை குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மௌனிகா ஆக்சிஸ் வங்கியில் மென்பொருள் பொறியாளராகவும், ரமாகாந்த் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எச்.ஆர் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்.

Advertisement

குழந்தைகளை பராமரிப்பது தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மௌனிகா, ஞாயிற்றுக்கிழமை கணவர் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in