“யாரோ அந்த பட்டனை அமுக்கிட்டாங்க..!” லிஃப்டில் நடந்த கொடூரம்.. இரண்டு தளங்களுக்கு இடையே தலைகீழாகத் தொங்கிய கணவன்… அலறிய மனைவி.. நடுக்கமூட்டும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரோ அந்த பட்டனை அமுக்கிட்டாங்க..!” லிஃப்டில் நடந்த கொடூரம்.. இரண்டு தளங்களுக்கு இடையே தலைகீழாகத் தொங்கிய கணவன்… அலறிய மனைவி.. நடுக்கமூட்டும் சம்பவம்..!!

Published

on

ஹைதராபாத் மூசாபேட் பகுதியில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பில், லிஃப்ட் மற்றும் சுவற்றுக்கு இடையே சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த 40 வயது முதியவரை ஹைட்ரா மீட்புப் படையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். முரளி என்பவர் தனது மனைவியுடன் தரைத்தளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு லிஃப்டில் சென்றுள்ளார். இரண்டாவது தளம் வந்ததும் அவர் வெளியேற முயன்ற அந்தத் தருணத்தில், மூன்றாவது தளத்தில் இருந்த யாரோ ஒருவர் லிஃப்ட் பொத்தானை அழுத்தியுள்ளனர். இதனால் பழைய மாடலான அந்த லிஃப்ட் திடீரென மேல்நோக்கி நகரத் தொடங்கியதில், முரளியின் ஒரு கால் லிஃப்டிற்குள்ளும் மற்றொரு கால் வெளியேயும் இருந்த நிலையில், அவர் இரண்டு தளங்களுக்கு இடையே தலைகீழாகத் தொங்கியபடி சுவற்றுடன் நசுங்கிப் பதைபதைக்க வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

லிஃப்டிற்குள் இருந்த அவரது மனைவி அலறல் சத்தம் போடவே, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றும் முடியாததால் ஹைட்ரா கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு 15 நிமிடங்களில் விரைந்து வந்த ஹைட்ரா பேரிடர் மீட்புப் படை மற்றும் சநாத்நகர் தீயணைப்புத் துறையினர், ஹைட்ராலிக் கட்டர் மூலம் சுவரை உடைத்து சுமார் 1.5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முரளியை பத்திரமாக மீட்டனர். இரண்டு சுவர்களுக்கு இடையே கால் நசுங்கியதில் முரளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in