“அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு…” பட்டப்பகலில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. 7 வயது மகனின் பகீர் வாக்குமூலம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு…” பட்டப்பகலில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. 7 வயது மகனின் பகீர் வாக்குமூலம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில், கள்ளத்தொடர்பு குறித்து தட்டிக்கேட்ட மனைவியை அரசுப் பள்ளி உதவி ஆசிரியர் அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திலீப் குமார் என்ற அரசுப் பள்ளி உதவி ஆசிரியர், வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றி அவருடைய மனைவி ஷாலினி தட்டிக்கேட்டு கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திலீப் குமார், மனைவியை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, “அப்பா தான் அம்மாவைக் கொன்றார்” என்று அந்த 7 வயது சிறுவன் உறவினர்களிடம் கூறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் உரைய வைத்துள்ளது. மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய உதவி ஆசிரியர் திலீப் குமாரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in