“அவசரமா பேசணும்.. வீட்டுக்கு வாங்க!” – நைசாக பேசி வரவழைத்த மனைவி… கணவனை 17 முறை கோடரியால் வெட்டி… பெத்த தாய் வீட்டிலேயே கணவனுக்கு மரண ஸ்கெட்ச்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவசரமா பேசணும்.. வீட்டுக்கு வாங்க!” – நைசாக பேசி வரவழைத்த மனைவி… கணவனை 17 முறை கோடரியால் வெட்டி… பெத்த தாய் வீட்டிலேயே கணவனுக்கு மரண ஸ்கெட்ச்..!!

Published

on

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரின் புதானா பகுதியில், திருமணத்திற்கு மீறிய கள்ள உறவு காரணமாக 26 வயது இளைஞர் ஒருவர் கோடரியால் 17 முறை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் சனிக்கிழமை அரங்கேறியுள்ளது. குஜராத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்த தாலிப் என்ற அந்த இளைஞரை, அவரது மனைவி மீனா “அவசரமாகப் பேச வேண்டும், உடனே வீட்டிற்கு வாருங்கள்” என்று நைசாகப் பேசி தனது பெற்றோர் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். கணவன் வீட்டிற்கு வந்த உடனே, மீனாவின் கள்ளக்காதலனான ஆசிம் (25) என்பவர் தாலிப் மீது விவசாயக் கோடரியைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். உடல் முழுவதும் ஆழமான வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாலிப், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தாலிப் மீது ஆசிம் கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் இந்த பயங்கரக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக தாலிபின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், மனைவி மீனா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆசிம் ஆகிய இருவர் மீதும் கொலை மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கொலையைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஆசிம், ஞாயிற்றுக்கிழமை லுஹாசனா கிராமத்தை நோக்கி தப்பியோட முயன்றபோது போலீஸாரிடம் சிக்கினான்.

Advertisement

போலீஸாரைக் கண்டதும் கரும்புத் தோட்டத்தில் ஒளிந்துகொண்டு ஆசிம் துப்பாக்கிச் சூடு நடத்த, போலீஸார் தற்காப்பிற்காகத் திருப்பிச் சுட்டதில் அவனது காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த ஆசிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், அவனிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட விவசாயக் கோடரி மற்றும் நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, பெத்த தாயார் வீட்டிற்கே கணவனை வரவழைத்துக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்ட மனைவியின் இந்த கொடூரச் செயல் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in