CRIME
“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” கதவை உடைத்து புகுந்த மிருகம்.. தன்மானத்தைக் காக்கப் போராடிய தாய்… துடிதுடித்துப் போன குழந்தை.. 65 வயது முதியவரின் வெறிச்செயல்.. தேசத்தையே உலுக்கிய சம்பவம்..!!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில், விதவைப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரும் அவரது 10 மாதப் பெண் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாய்லுங்கா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், நள்ளிரவில் அக்கிரமமாகப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த 65 வயதான நாகவன்ஷி என்ற நபர், அப்பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
அப்பெண் தன்மானத்தைக் காக்கப் போராடியபோது, ஆத்திரமடைந்த நாகவன்ஷி செங்கலால் அவரது தலை மற்றும் முகத்தில் கடுமையாகத் தாக்கிப் பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார். இதற்கிடையே தாய் தாக்கப்பட்டதைக் கண்டு குழந்தை அலறித் துடித்ததால், அக்குழந்தையையும் செங்கலால் அடித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார். தீவிர விசாரணைக்குப் பிறகு கையில் இருந்த காயத்தை வைத்து குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறையினர், நாகவன்ஷியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
