LATEST NEWS
“CM விஜய்க்கு அடுத்தடுத்த சிக்கல்..!” பழனி வழக்கின் முக்கிய நபர் சிறைக்குள் பலி.. தமிழக அரசியலை உலுக்கும் சந்தேக மரணம்..!!
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் கைதாகிச் சிறைக்காவலில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் மரணமடைந்த சம்பவம், தமிழக அரசியல் தளத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சிறைக் கைதியாக இருந்தபோதே அவர் உயிரிழந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதோ முறைகேடு நடந்திருக்கக் கூடும் என அவரது உறவினர்களும் வழக்குரைஞர் சங்கத்தினரும் தீவிரமான சந்தேகங்களை எழுப்பி, உரிய விசாரணை கோரி வருகின்றனர்.
அன்வர்தீனின் உடல்நிலை குறித்துச் சிறைத் துறையினரோ அல்லது காவல் துறையினரோ எவ்விதத் தெளிவான விளக்கத்தையும் தங்களுக்கு வழங்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சந்தேகத்திற்குரிய மரணம் குறித்து உடனடியாக உயர்நிலை விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்த அரசு முன்வரவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிறைக் காவலில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருவதால், இவிவகாரம் அரசுக்கு மேலும் எதிர்ப்பைக் கூட்டியுள்ளது.
