LATEST NEWS
“அய்யோ உள்ள ஆள் இருக்காங்க..!” வெள்ளத்தில் சிக்கிய கார்… கதவுகள் லாக் ஆகி உயிருக்குப் போராடிய ஓட்டுநர்… திகிலூட்டும் வீடியோ..!!
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் பெய்த கனமழையால், ரயில்வே அண்டர்பாஸ் பாலம் பகுதியில் திடீரென நீர்மட்டம் உயர்ந்து சுமார் 25 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. இந்த வெள்ளநீரில் கார் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சிக்கி, முற்றிலும் மூழ்கிய பயங்கரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
बीते कल फरीदाबाद में भारी बारिश के चलते अंडर क्रासिंग ब्रिज पुल के नीचे एक कार डूब गई थी, जिसे ट्रैक्टर की मदद से बाहर निकाला गया था।
गाड़ी पूरी तरह से पानी में डूबी थी उसके बावजूद गाड़ी के वाईपर कांच साफ कर रहे थे। pic.twitter.com/N0xsqW4p8h— Abhimanyu Singh (@Abhimanyu1305) August 8, 2026
கார் முழுமையாக தண்ணீரில் மூழ்கிய நிலையிலும், அதன் வைப்பர்கள் தொடர்ந்து இயங்கி கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே, தண்ணீரில் மூழ்கிய காரை மீட்பதற்காக டிராக்டர் மற்றும் அப்பகுதி மக்களின் உதவி பெறப்பட்டு, கார் பத்திரமாக வெளியே இழுத்து வரப்பட்டது. காரின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் லாக் ஆனதால் உள்ளே சிக்கியிருந்த ஓட்டுநர், கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்து குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது.
