LATEST NEWS
ச்ச இப்படியொரு MLA-ஆ..? சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்த தவெக MLA… இணையத்தில் வைரலாகும் வீடியோவால் குவியும் பாராட்டுக்கள்.!!
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, ‘Green Cumbum, Clean Cumbum’ என்ற முன்னெடுப்பின் கீழ் தனது தொகுதியில் தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று கம்பம் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தேங்கியிருந்த குப்பைகள், குப்பைக் குளங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த சாக்கடைக் கால்வாய் அடைப்புகள் போன்றவற்றைத் தனது ஆதரவாளர்களுடன் நேரில் சென்று போர்க்கால அடிப்படையில் அகற்றினார்.
தொகுதியைத் தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றுவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்ட ஜெகநாத் மிஸ்ரா, பொதுமக்கள் சுகாதாரமான சூழலில் வாழ வழிவகை செய்யும் வகையில், இந்தத் தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதியின் இந்த நேரடி களப்பணி தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
