LATEST NEWS
“சின்னம்மாவை CM ஆக்க சொன்னதே இவர்தான்” 6 மாசத்துல EPS-க்கு ஷாக் கொடுப்பாரு.. ஆர்.பி.உதயகுமாரின் ரகசிய ப்ளானை உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்..!!
அதிமுகவை அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தான் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் உள்ள முக்கியப் புள்ளிகளின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டார்.
தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கான அனைத்துப் பணிகளையும் ஆர்.பி. உதயகுமார் ரகசியமாகச் செய்து வருகிறார் என்று அவர் கூறினார். மேலும், ‘ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லை, சின்னம்மாவை (சசிகலா) முதல்வராக்குங்கள்’ என அன்றைய காலகட்டத்தில் முதன்முதலில் குரல் கொடுத்ததும் ஆர்.பி. உதயகுமார் தான் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசியல் சூழலைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், இன்னும் 6 மாதங்களில் ‘இபிஎஸ் தேவையில்லை, நானே போதும்’ என்று ஆர்.பி. உதயகுமார் பகிரங்கமாகக் கூறும் நிலை வரும் என்றார். இந்த விமர்சனம் தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக மற்றும் திமுக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
