LATEST NEWS
அமைச்சர் நிர்மல்குமார் மனைவி திடீர் பணியிடமாற்றம்… புதிய ஆசிரியர் வராததால் சக ஆசிரியர்களுக்குக் கூடுதல் சுமை..!!
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவி திருவல்லிக்கேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஏற்கனவே பணியாற்றிய பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பணியிடம் கடந்த 2 மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்களின் கற்றல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பொதுவான ஆசிரியர் கலந்தாய்வு நிறுத்தப்பட்டிருந்த சூழலில் இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாகப் புதிய ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, அங்குள்ள மற்ற ஆசிரியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதோடு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்க மாற்று ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
