நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..! சுற்றிலும் சீறிப்பாய்ந்த பெருவெள்ளம்… வீட்டின் கூரையில் தனியாக தவித்த சிறுவன்… உயிரைக் காப்பாற்றிய ஒற்றை டி-சர்ட் சிக்னல்… கடைசி நொடியில் வான்வழியாக ஹெலிகாப்டரில் பாய்ந்து மீட்ட ராணுவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..! சுற்றிலும் சீறிப்பாய்ந்த பெருவெள்ளம்… வீட்டின் கூரையில் தனியாக தவித்த சிறுவன்… உயிரைக் காப்பாற்றிய ஒற்றை டி-சர்ட் சிக்னல்… கடைசி நொடியில் வான்வழியாக ஹெலிகாப்டரில் பாய்ந்து மீட்ட ராணுவம்..!!

Published

on

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தின் சீற்றம் காரணமாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளின் கூரைகளிலும் உயரமான இடங்களிலும் தஞ்சமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கட்டிடத்தின் மேல் கூரையில் சிறுவன் ஒருவன் தனியாகச் சிக்கிக் கொண்டான். சுற்றிலும் சீறிப்பாயும் வெள்ளநீருக்கு நடுவே உதவிக்கு வழியின்றி தவித்த அந்தச் சிறுவன், காற்றில் பறந்து சென்ற ராணுவ ஹெலிகாப்டரின் கவனத்தை ஈர்ப்பதற்காகத் தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழற்றி காற்றில் அசைத்துக் காட்டி உதவி கோரினான்.

Advertisement

சிறுவனின் சிக்னலைக் கண்ட நேபாள ராணுவ வீரர்கள், ஆபத்தான நிலையிலும் ஹெலிகாப்டரை கட்டிடத்தின் கூரைக்கு மிகவும் அருகில் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் சிறுவனின் கையைப் பிடித்து லாவகமாக மேலே தூக்கி ஹெலிகாப்டருக்குள் இழுத்து பாதுகாப்பாக மீட்டார். இந்தத் திகைப்பூட்டும் மீட்புப் பணி குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in