LATEST NEWS
“தீ விபத்தா..?! என்ன நடந்தது அங்கே…?” ரயில் சக்கரங்களில் இருந்து கிளம்பிய புகை… நடுவழியில் அலறியடித்து ஒடிய பயணிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் கர்ஜத் இரயில் நிலையத்திற்கு அருகே, கொங்கன் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட பிரேக் ஜாமிங் காரணமாக தடிமனான புகை வெளியேறியது. இரயிலில் இருந்து திடீரென கரும்புகை சூழ்ந்ததைக் கண்ட பயணிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்து, பயத்தில் அலறியடித்துள்ளனர். இதனால் இரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பயமும் நிலவியது.
https://twitter.com/Pahadi_Anjana/status/2093798842999419379/video/1
இருப்பினும், இது பெரிய அளவிலான தீ விபத்து எதுவும் இல்லை என்றும், சக்கரங்களுக்கும் பிரேக் பேட்களுக்கும் இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாகவே இந்த புகை வெளிவந்தது என்றும் இரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட இந்த புகையை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்கள் உடனடியாக அணைத்தனர். இரயிலில் இருந்த அனைத்துப் பயணிகளும் எவ்வித காயமுமின்றி முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
