LATEST NEWS
அரசு பஸ்களில் பெண்களுக்கு மட்டுமே இலவச பயணமா..? ஆண்கள் லிஸ்டில் இல்லையா…? நிருபரின் கிடுக்கிப்பிடி கேள்விக்கு.. அமைச்சரின் அளித்த அல்டிமேட் காமெடி பதில்..!!
நாமக்கல் சென்று இருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அமைச்சரும் அதற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நிருபர், “அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறீர்கள். ஆண்கள் அந்த லிஸ்டில் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர் தமிழன் பார்த்திபன் சுதாரித்துக்கொண்டு, “நீங்கள் என் அண்ணன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். என் தங்கையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன் என்றால், என் மச்சான் கிட்ட தங்கச்சி பணம் கேட்கக்கூடாது என்பதற்காக, உங்களைத் தொந்தரவு பண்ணக்கூடாது என்பதற்காக இலவசமாக விட்டுள்ளோம். உங்கள் பணத்தைதான் மிச்சம் பண்ணிக் கொடுத்திருக்கிறோம்” என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார். அமைச்சரின் இந்த வித்தியாசமான பதில் அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தது.
