LATEST NEWS
“நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..! சவரனுக்கு ₹10,000 வரை குறையப்போகுதா..?!” மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு… வெளியான அசத்தல் தகவல்..!!
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, உள்நாட்டுச் சந்தையைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் கடந்த மே மாதம் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த வரி உயர்வு காரணமாகச் சர்வதேச எல்லைகள் வழியாகச் சட்டவிரோதமான தங்கக் கடத்தல் சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதாக நாடு முழுவதிலும் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் மத்திய அரசுக்குத் தொடர் புகார்களைக் கொண்டு சென்றனர்.
இந்தக் கடத்தல்களைத் தடுத்து, முறையான தங்க வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கில், உயர்த்தப்பட்ட இறக்குமதி வரியை மீண்டும் பழையபடி 6 சதவீதமாகக் குறைக்க அரசு தற்பொழுது திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஆலோசனையானது இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாகச் சரிந்து, சவரனுக்கு ரூ.10,000 வரை விலை குறைய பிரகாசமான வாய்ப்புள்ளது. இந்தத் தகவல் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
