CRIME
“90 நிமிடங்களில் முடிந்த கொடூரம்” வேலைக்கு சேர்ந்த 4 நாட்களில் இப்படியா..? லிஃப்ட்டில் ஏறி மாடிக்கு பெண்ணை அழைத்துச் சென்று செக்யூரிட்டி செய்த கொடூரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மொட்டை மாடியில், 23 வயதுடைய இண்டீரியர் டிசைன் மாணவி ஒருவர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தரம் சிங் என்ற காவலாளியால் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் சனிக்கிழமை இரவு அரங்கேறியுள்ளது. மொட்டை மாடியில் அந்த மாணவி செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அந்தப் பாதுகாப்பு ஊழியர், அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவிக்கவே, அவரின் கழுத்தில் கம்பியைக் கொண்டு இறுக்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மாடித் கதவைப் பூட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கத்திய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பூட்டப்பட்ட கதவைத் திறந்து அவரை மீட்டுப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் களமிறங்கிய 10 தனிப்படையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை தரம் சிங்கை கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது, போலீஸாரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்ற அந்தப் பயங்கரவாதியை நோக்கி அதிகாரிகள் சுட்டதில், அவனது காலில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பின்னணி விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட தரம் சிங் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் ‘ஏ1’ என்ற தனியார் பாதுகாப்பு முகமை மூலம் எந்தவித முறையான பின்னணி சரிபார்ப்பும் (Background verification) இல்லாமல் அங்குப் பணியமர்த்தப்பட்டுள்ளான் என்பது தெரியவந்துள்ளது. இந்த அலட்சியப் போக்கிற்காக அந்தப் பாதுகாப்பு முகமை மீதும் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் போலீஸார் உறுதி அளித்துள்ளனர். மருத்துவமனை படுக்கையில் இருந்துகொண்டு “என்னை மன்னித்துவிடுங்கள், இனி இப்படிச் செய்ய மாட்டேன்” என்று அந்தக்
