“ஐயோ பெண்களுக்கே பாதுகாப்பில்லையா..?!” நான் புக் பண்ணவே இல்லை… அப்புறம் எப்படி…? தனியாக நின்ற பெண்ணிடம் அத்துமீறிய வாலிபன்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ பெண்களுக்கே பாதுகாப்பில்லையா..?!” நான் புக் பண்ணவே இல்லை… அப்புறம் எப்படி…? தனியாக நின்ற பெண்ணிடம் அத்துமீறிய வாலிபன்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த சம்பவம்..!!

Published

on

ஹைதராபாத்தில் சித்தி என்ற பெண் வெளியே சென்றிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில் இர்ஃபான் என்ற வாலிபன் அங்கு வந்துள்ளார். அந்தப் பெண் ரேபிடோ பைக் எதுவும் பதிவு செய்யாத நிலையிலும், “நீங்கள் ரேபிடோவுக்காக காத்திருக்கிறீர்களா? பரவாயில்லை வாருங்கள், நீங்கள் சொல்லும் இடத்திலேயே கொண்டு போய் விடுகிறேன்” என்று அந்த வாலிபன் வற்புறுத்தியுள்ளார். சொந்தமாக ஸ்டார்ட் கூட ஆகாத பைக்கை வைத்துக்கொண்டு, தனியாக நிற்கும் பெண்களிடம் இவ்வாறான நபர்கள் அத்துமீறிப் பேசுவது, ஹைதராபாத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

लड़की का नाम सिद्धि है ये हैदराबाद में बाहर गई थी और ऑटो को पूछ रही थी

कि उसी बीच ये लड़का आया जिसका नाम इरफान है

इसने कहा कि मैडम आप रैपिडो का इंतजार कर रही हो क्या?

लड़की ने कहा कि मैने कोई रेपिडो बुक ही नहीं किया तो आपने कैसे पूछा

लड़का कहता है कोई बात नहीं आओ मैं आपको… pic.twitter.com/iy6f5cZ9a1— Anshi yadav (@AnsHi_0X) August 10, 2026

ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், குற்றவாளிகள் எவ்வித பயமுமின்றிப் பகிரங்கமாக உலாவுவதும், காவல்துறையின் கண்காணிப்பு பலவீனமாக இருப்பதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுவே உத்தரப் பிரதேச மாநில காவல்துறையாக இருந்திருந்தால், இதுபோன்ற நபர்களுக்கு உடனடியாக உரிய பாணியில் நடவடிக்கை எடுத்து வீடியோ வெளியிட்டிருப்பார்கள் என்று சுட்டிக்காட்டும் பொதுமக்கள், தெலங்கானா அரசும் காவல்துறையும் உடனடியாக விழித்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in