பைக்குள்ள என்ன.? காரில் சென்றவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பெட்டியைத் திறந்ததும் அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… காவலாளிகளை அதிர வைத்த அந்த ஒரு உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பைக்குள்ள என்ன.? காரில் சென்றவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பெட்டியைத் திறந்ததும் அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… காவலாளிகளை அதிர வைத்த அந்த ஒரு உண்மை..!!

Published

on

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தென்மேற்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ஓலன்’ கிராமப் பகுதியில், காரில் சென்ற இருவர் ஒரு பயணப் பையைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது, காயங்களுடன் பெண் ஒருவரின் உடல் கிடப்பதாகக் கருதி உடனடியாகப் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அதைக் கொலை வழக்காகக் கருதிய நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கொலை வழக்கு விசாரணை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துத் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

தடயவியல் ஆய்வகத்தில் அந்தப் பையைச் சோதனையிட்டபோதுதான் அது உண்மையான மனித உடல் அல்ல; நிஜப் பெண் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு பொம்மை என்பது தெரியவந்தது. அந்தப் பொம்மையில் தலைமுடி, மூக்குக் குத்தி ஆடைகள் ஆகியவை இருந்ததோடு, உடலில் காயங்கள் மற்றும் கீறல்கள் போன்ற தழும்புகளும் காணப்பட்டதால், அது மனித உடல் எனத் தவறாகக் கருதப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

காவல்துறை கண்காணிப்பாளர் லிண்டா பிராட்பரி இந்தச் சம்பவம் குறித்துப் பேசுகையில், அந்தப் பொம்மை முற்றிலும் ஒரு மனித உடலைப் போலவே காட்சியளித்ததால் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது நியாயமானதுதான் எனக் கூறினார். சந்தேகத்தின் பேரில் உடனடியாகத் தகவல் தெரிவித்த நபர்களைப் பாராட்டிய காவல்துறை, தங்கள் விசாரணை முறையில் எந்தத் தவறும் இல்லை என்றும், இதன் மூலம் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in