CRIME
பகீர்..! “போனில் 600 ஆபாச வீடியோக்கள்..” பணம் தர்றேன்னு சொல்லி ஆசைகாட்டி… 4 ஆண்டுகளாக சிறுவர்களைச் சீரழித்த 22 வயது மிருகம்.. நெஞ்சை உறையவைக்கும் பின்னணி..!!
மகாராஷ்டிராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த சேட்டன் பிரகாஷ் என்ற 22 வயது நபரை அம்மாநில காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குப் பணம் தருவதாக ஆசைகாட்டி அழைத்துச் சென்று, அவர்களைக் கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த அத்துமீறல்களைத் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து, அவற்றை வெளியே காட்டிவிடுவேன் என மிரட்டிப் பிளாக்மெயில் செய்து கடந்த 4 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் அவர்களை வன்கொடுமை செய்துவந்துள்ளான். கைது செய்யப்பட்ட அந்நபரின் போனைப் பறிமுதல் செய்து சோதனையிட்டதில், அதில் 600-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
