CRIME
“வேலை செய்யும் இடமா… நரகமா..?” கார்ப்பரேட் கொடூரத்தால் இளம்பெண் விபரீத முடிவு.. தற்கொலை கடிதத்தில் மேலதிகாரிகளின் கொடூரத்தை தோலுரித்த பெண்..!!
மைசூருவில் 4 மாதங்களாகத் தொடர்ச்சியாக விடுமுறை எதுவுமின்றி வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாராந்திர விடுப்புகளும் மறுக்கப்பட்டு, பணியிடத்தில் மேலதிகாரிகளால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாக அவர் எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த கடிதத்தில் மேலதிகாரிகள் தன்னை மட்டுமே தனிப்பட்ட முறையில் குறிவைத்து மனரீதியாகத் சித்திரவதை செய்ததாகவும், இது குறித்து நியாயம் கேட்டதற்காகத் தன்னை வேலையை விட்டு உடனடியாக நீக்கியதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். வேலை இழப்பு மற்றும் தொடர் மன உளைச்சலால் வேறு வழியின்றி அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படும் சம்பவம், தற்போதைய கார்ப்பரேட் பணியிட கலாச்சாரம் மற்றும் ஊழியர்கள் சந்திக்கும் மன அழுத்தம் குறித்த தீவிர விவாதத்தை சமூகத்தில் உருவாக்கியுள்ளது.
