இப்படிக்கூடவா திருடுவாங்க..? ரோட்டில் நின்ற பசுவுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய கும்பல்.. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்படிக்கூடவா திருடுவாங்க..? ரோட்டில் நின்ற பசுவுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய கும்பல்.. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

மஹாராஷ்டிராவின் பிம்ப்ரி-சின்ச்வாட் நகரில் உள்ள வைபவ் நகர் பகுதியில், ஜூலை 28 அதிகாலை சுமார் 1:45 மணியளவில் ரூ.20,000 மதிப்புள்ள பசு ஒன்று திருடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அப்பகுதிக்குள் நுழைந்து, பசுவைத் தூக்கி காரில் ஏற்றிச் செல்லும் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, இரவு ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.

#ViralVideo: Three men were caught on #CCTV allegedly stealing a #cow worth ₹20,000 from #Pimpri-Chinchwad at around 1:45 am. The accused are seen lifting the animal into a car before fleeing. It happened in the Vaibhav Nagar area of Pimpri Gaon. #Pune #Maharashtra pic.twitter.com/yoUi2KlHHS— Varad Bhatkhande | Journalist (@VaradBhatkhande) July 29, 2026

இச்சம்பவம் குறித்து பிம்ப்ரி காவல்துறையினர் பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், சட்டவிரோத விற்பனை அல்லது இறைச்சிக்காக இத்திருட்டு நடந்ததா என்ற கோணத்திலும், இதே போன்ற முந்தைய சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in