“ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க” வழக்கில் இருந்து தப்பிக்கவா இந்த வேலை..? விஜய்யை வம்புக்கு இழுத்த முரசொலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க” வழக்கில் இருந்து தப்பிக்கவா இந்த வேலை..? விஜய்யை வம்புக்கு இழுத்த முரசொலி..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் காரசாரமான தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், “ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க” என்பது முதலமைச்சர் விஜய்யின் புகழ்பெற்ற பொன்மொழி என்றும், இந்த வாசகத்தைப் பனையூரில் கல்வெட்டாகச் செதுக்கி வைத்து அதன் பக்கத்தில் அவரே உட்கார்ந்து கொள்ளலாம் என்றும் எள்ளல் நடையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தலையங்கத்தில் கரூர் விவகாரத்தைக் குறிப்பிட்டுப் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தன் மீதான வழக்கில் இருந்து தப்பிக்கவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன் தலையைக் காப்பாற்றிக் கொள்ளவும் மற்றும் தன் மீதான பழியைத் துடைத்துக் கொள்ளவுமே கரூர் குடும்பங்களை விஜய் வளைக்கப் பார்த்தார் என்றும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து ‘ரீல் அறுந்துவிட்டது’ என்றும் முரசொலி விமர்சித்துள்ளது.

Advertisement

சமீபகாலமாக அரசியல் மேடைகளில் தவெக தலைவர் விஜய் அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முரசொலி இந்தத் தலையங்கத்தை வெளியிட்டுள்ளது. வழக்கமான அரசியல் மோதல்களைத் தாண்டி, இரு தரப்பிற்கும் இடையேயான இந்த வார்த்தைப் போர் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in