“நோயாளி என்று பொய் சொல்லி அடக்கம்”… போன் காலில் மாட்டிய கொடூரம்… பெத்த பிள்ளையை தாயே செய்த கொடூரம்… கல்லறையைத் தோண்டி உடலை எடுத்த போலீஸ்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நோயாளி என்று பொய் சொல்லி அடக்கம்”… போன் காலில் மாட்டிய கொடூரம்… பெத்த பிள்ளையை தாயே செய்த கொடூரம்… கல்லறையைத் தோண்டி உடலை எடுத்த போலீஸ்..!!

Published

on

மதுராவைச் சேர்ந்த 32 வயதான ருச்சி ஜிந்தால் என்ற பெண், தனது கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது 3 வயதுக் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. காதலனுடன் பேசுவதற்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்த தாய், குழந்தையின் அழுகையை நிறுத்தச் சொல்லி அவனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், தனது கணவரிடம் குழந்தை உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகப் பொய் கூறி, உடலையும் அடக்கம் செய்துள்ளார்.

வெளியூரில் வேலை பார்த்து வரும் கணவர் கிருஷ்ண முராரி குப்தாவிற்கு, குழந்தையின் திடீர் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர் மனைவியின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆராய்ந்துள்ளார். அப்போது மனைவி தனது காதலனுடன் பேசியதும், அதில் ஒரு உரையாடலில் “அன்று நான் மாட்டியிருப்பேன், நூல் இழையில் தப்பித்துவிட்டேன்” எனத் தனது குழந்தையின் கொலையைப் பற்றிப் பேசியதும் கணவருக்குத் தெரியவந்து அதிர்ச்சியளித்தது.

Advertisement

இதனையடுத்து கணவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தாய் ருச்சி ஜிந்தால் காதலனுடன் பேசுவதற்காகத் தன் சொந்தக் குழந்தையையே கொன்ற கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in