LATEST NEWS
“மனுஷனா இவங்க..? ஆள் இருக்கு… ஆனா மருந்து தர மாட்டோம்..!” அரசு ஆஸ்பத்திரியில் அரங்கேறிய கொடூரம்.. கொதித்தெழும் நெட்டிசன்கள்..!!
இந்திரா காந்தி மருத்துவமனையில் உள்ள ஜன் அவஷதி மருந்தகத்தில் மருந்துகளைப் பெறுவதற்காக நோயாளிகள் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கவுண்டரில் ஊழியர்கள் இருந்தபோதிலும், மருந்து விநியோகத்தைத் தொடங்காமல் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பொறுமையிழந்த நோயாளிகள் காரணத்தைக் கேட்டபோது, அங்கிருந்த ஊழியர் மிகவும் அலட்சியமாகப் பதிலளித்து நோயாளிகளைத் தேவையின்றி காத்திருக்க வைத்துள்ளார்.
पोछा सूखने तक दवा नहीं मिलेगी!” इंदिरा गांधी अस्पताल के जन औषधि केंद्र पर मरीजों से बदसलूकी
इंदिरा गांधी अस्पताल के जन औषधि केंद्र में मरीजों को कथित तौर पर करीब 15 मिनट लाइन में खड़ा रहना पड़ा
आरोप है कि काउंटर पर स्टाफ मौजूद होने के बावजूद दवा वितरण शुरू नहीं किया गया।… pic.twitter.com/FuiLxcLFV1— Chairman🍁 (@chairman_8555_) July 30, 2026
தரை துடைக்கப்படுகிறது. தரை காய்ந்த பிறகே மருந்துகள் வழங்கப்படும், அதுவரை மருந்து கிடையாது என்று நோயாளிகளிடம் அந்த ஊழியர் மிகவும் கரடுமுரடான முறையில் நடந்து கொண்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உடல்நலக்குறைவால் அவதியுற்று மருந்து வாங்க வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் காட்டிய இந்த அநாகரிகமான மற்றும் அலட்சியப் போக்கு, மருத்துவமனை வளாகத்தில் கடும் அதிருப்தியையும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
