“ஒரு கை இல்லைனா என்ன..?” 10 வயது சிறுமியின் கனவை நனவாக்கி…சிறுமியுடன் சேர்ந்து மாஸ் டான்ஸ் ஆடிய நடிகை சிம்ரன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரு கை இல்லைனா என்ன..?” 10 வயது சிறுமியின் கனவை நனவாக்கி…சிறுமியுடன் சேர்ந்து மாஸ் டான்ஸ் ஆடிய நடிகை சிம்ரன்..!!

Published

on

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சிம்ரன், பிறவியிலேயே ஒரு கை இல்லாமல் பிறந்த நிஷா என்ற 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கியுள்ளார். நிஷா தனது மாற்றுத்திறனைப் பொருட்படுத்தாமல் சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். குறிப்பாக நடிகை சிம்ரனின் நடனத்தால் ஈர்க்கப்பட்ட அவர், சிம்ரன் நடித்த பல பாடல்களுக்கு நடனமாடி அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த வீடியோக்களைப் பார்த்த சமூக ஆர்வலர் ஆஷிக் என்பவர், நிஷாவின் திறமையை சிம்ரனின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். மேலும், பள்ளிக்குச் செல்ல ஒரு புதிய சைக்கிள் வேண்டும் என்பதே அச்சிறுமியின் நீண்டநாள் ஆசை என்பதையும் அவர் சிம்ரனிடம் தெரிவித்துள்ளார். இதையறிந்த சிம்ரன், சிறுமி நிஷாவைத் தனது வீட்டிற்கு நேரில் அழைத்து அன்புடன் வரவேற்று, நீண்ட நேரம் அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

Advertisement

அதன்பின், நிஷா பயிற்சி செய்து வந்த தனது பிரபல பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடிய சிம்ரன், சிறுமியின் நீண்டநாள் கனவான புதிய சைக்கிளையும் பரிசாக வழங்கியுள்ளார். மேலும், “படிப்பிலும் கவனம் செலுத்தி, உன் நடனக் கனவையும் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து சாதிக்க வேண்டும்” என்று ஊக்கமளித்துள்ளார். சிம்ரனும் நிஷாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சிம்ரனின் இந்த நெகிழ்ச்சியான செயலை ரசிகர்களும் திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in