LATEST NEWS
பகீர் எச்சரிக்கை..! “இன்னும் 30 ஆண்டுகளில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே முற்றிலும் அழியும்” DNA-வை மாற்றும் அரக்கன்… பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமியின் அதிரவைக்கும் தகவல்..!!
தமிழகத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டதில் இருந்து, தற்போது வரை இரண்டு தலைமுறைகளாகத் தமிழர்கள் தொடர்ந்து மது அருந்தி வருகின்றனர் என்று பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் பழக்கத்தினால், தற்போதைய மதுப்பிரியர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் ஜீன்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதே நிலை நீடித்து, தொடர்ந்து மூன்றாவது தலைமுறையும் மதுவுக்கு அடிமையானால், இனி பிறக்கும் குழந்தைகள் பிறக்கும்போதே மதுவின் பாதிப்போடு பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக, வரலாற்று ரீதியாக ஆரோக்கியமாக இருந்த தமிழர்களின் ஒட்டுமொத்த DNA-வே மாற்றம் அடைந்து, மனித குலத்திற்கே ஒரு பெரிய பேரழிவை உருவாக்கும் ஆபத்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் இன்னும் தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தாமல் இருந்தால், அடுத்த 30 ஆண்டுகளில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளார். இந்த மாபெரும் சுகாதாரப் பேரழிவிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், எதிர்காலத் தலைமுறையினரை மீட்டெடுக்கவும் ‘மதுவை முழுமையாக ஒழிப்பதே’ ஒரே தீர்வு என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
