LATEST NEWS
அரசுமருத்துவமனையில் உச்சகட்ட கொடூரம்..! பிரசவ அறையில் இல்லாத மருத்துவர்… அடுத்தடுத்து துடிதுடித்து இறந்த தாயும் சேயும்… சடலங்களுடன் உறவினர்கள் விடிய விடிய போராட்டம்..!
பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் உள்ள சதர் அரசு மருத்துவமனையில், பிரசவ அறையில் பெண் மருத்துவர் இல்லாத காரணத்தால் தாயும் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. குழந்தை பிறந்து 6 மணி நேரத்திற்குப் பிறகு தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிகிச்சை குறைபாடு மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே இந்த மரணத்திற்குக் காரணம் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை வளாகத்தில் வைத்து விடிய விடிய விசித்திரமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரசவத்தின் போது அங்கு இருக்க வேண்டிய பெண் மருத்துவர் பணியில் இல்லை என்பதை உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீவிரக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் இந்தச் சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பணியில் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ள இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
