“வாடி நாம சந்தோஷமா வாழலாம்” மனைவியை சமாதானம் செய்ய ஓடிய கணவன்.. நடுவழியில் காத்திருந்த எமன்… பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே கணவன் துடிதுடித்து மரணம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாடி நாம சந்தோஷமா வாழலாம்” மனைவியை சமாதானம் செய்ய ஓடிய கணவன்.. நடுவழியில் காத்திருந்த எமன்… பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே கணவன் துடிதுடித்து மரணம்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, ரவி என்ற வாலிபரின் மனைவி கோபமடைந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் கவலையடைந்த ரவி, தனது மனைவியைத் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பலமுறை தொடர்பு கொண்டு சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், அவரின் மனைவி அதற்கு உடன்படாமல் தன் கோபத்தில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மனைவியை நேரில் சந்தித்துப் பேசி எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர ரவி முடிவு செய்தார். அதன்படி, அவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மாமியார் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.

Advertisement

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், கைசர்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு சுங்கச்சாவடி அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மீது இவருடைய பைக் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கரமான நேருக்கு நேர் மோதலில், படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோபத்தில் சென்ற மனைவியை அழைக்க ஆசையோடு சென்ற கணவன், விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in