கர்நாடகாவை உலுக்கும் கொடூரம்..! ஒரே நேரத்தில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு HIV தொற்று உறுதி… பதறிப்போன பெற்றோர்கள்; மாநில அரசு அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்நாடகாவை உலுக்கும் கொடூரம்..! ஒரே நேரத்தில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு HIV தொற்று உறுதி… பதறிப்போன பெற்றோர்கள்; மாநில அரசு அதிரடி உத்தரவு..!!

Published

on

கர்நாடகா மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல் அம்மாநில மக்களிடையேயும், குறிப்பாகப் பெற்றோர் மற்றும் கல்வித் துறையினரிடையேயும் பெரும் கவலையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் மத்தியில் இந்தத் தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கர்நாடக மாநில அரசு தற்போது அவசர அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, நோய் பரவலைத் தடுத்து இளம்தலைமுறையினரிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ மற்றும் பரிசோதனை முகாம்களை உடனடியாக நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இந்த உத்தரவின் கீழ், அனைத்துக் கல்லூரிகளிலும் எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் முறையான மருத்துவ ஆலோசனை முகாம்கள் தீவிரமாக நடத்தப்படவுள்ளன. மாணவர்களின் தனிப்பட்ட விபரங்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சைகளை வழங்கவும் மருத்துவக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in