CRIME
“தூக்க முடியலன்னு 2 துண்டாக வெட்டிட்டேன்…! மதுபோதையில் கெட்ட வார்த்தை பேசியதால்… பக்கத்து வீட்டுக்காரன் செய்த பகீர் காரியம்..!!
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் பளாமல்ஹரா காவல் எல்லைக்குட்பட்ட சூரஜ்புரா ரோட் கிராமத்தில், குப்பைக் கிடங்கில் பெண் ஒருவரின் சடலம் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கொலையில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரரான புத்த அகிர்வார் என்பவரைக் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண், பப்லேஷ் அகிர்வாரின் மனைவியான 40 வயதான ருக்ஸானா கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 4 அன்று கணவர் கூலி வேலைக்குச் சென்று மதியம் சாப்பிட வந்தபோது, ருக்ஸானா பக்கத்து வீட்டில் அமர்ந்திருந்துள்ளார். கணவர் வீட்டிற்கு வந்து சாப்பிடுமாறு அழைத்தும் அவர் வரவில்லை. மாலையில் கணவர் வீடு திரும்பியபோதும், ருக்ஸானா மாயமாகியிருந்தார். ஆகஸ்ட் 5 அன்று, கிராமத்து குப்பைக் கிடங்கில் பெண்ணின் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.
காவல்துறையின் விசாரணையில், ஆகஸ்ட் 4 அன்று ருக்ஸானா பக்கத்து வீட்டைச் சேர்ந்த புத்த அகிர்வாரின் வீட்டிற்குச் சென்று மது அருந்தியதும், அதிக அளவில் மது அருந்தியதால் அவர் கெட்ட வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததும் தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த புத்த அகிர்வார் தடியால் ருக்ஸானாவின் தலையில் தாக்கவே, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவில் சடலத்தை அப்புறப்படுத்த முற்பட்டபோது அதைத் தூக்க முடியாததால், கோடரியால் சடலத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி குப்பைக் கிடங்கில் வீசியதாகக் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கூடுதல் விவரங்கள் உறுதி செய்யப்படும் எனப் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
