“பகீர்..! தாம்பத்தியத்திற்கு நோ சொன்ன மனைவி..!” ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… 4 நாட்களுக்குப் பின் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“பகீர்..! தாம்பத்தியத்திற்கு நோ சொன்ன மனைவி..!” ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… 4 நாட்களுக்குப் பின் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!

Published

on

பீகாரீல் தீராஜ் குமார் மற்றும் ரீமா குமாரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், வேலை நிமித்தமாகப் பெங்களூரு கும்பல்கோடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்துள்ளனர். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ரீமா எப்போதும் செல்போனில் ரீல்ஸ் செய்வதிலும் நேரம் செலவழிப்பதாகவும், தாம்பத்திய உறவுக்கு மறுத்துத் தனக்கு மட்டும் சமைத்துக் கொண்டதாகவும் தீராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரீமா மீண்டும் பீகாருக்குச் செல்ல வேண்டும் என வற்புறுத்தியதால் இருவருக்குள்ளும் விரிசல் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 25 அன்று தீராஜ் வேலை முடிந்து வந்தபோது சமைக்காமல் இருந்த ரீமாவிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. படுக்கைக்கு வருமாறு அழைத்தபோது ரீமா மரக்குச்சியால் தாக்கியதால் ஆத்திரமடைந்த தீராஜ், ரீமாவின் முக்காட்டைக் கொண்டே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், முகத்தைப் பிளாஸ்டிக் கவரால் சுற்றி, உடலைப் பெட்ஷீட்டில் கட்டிக் கழிப்பறை அருகே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு அறையிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அழுகிய நிலையில் இருந்த உடலைக் கைப்பற்றினர்.

Advertisement

கொலை செய்துவிட்டுச் சொந்த மாநிலமான பீகாருக்குத் தப்பிச் சென்ற தீராஜைக் காவல்துறையினர் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட தீராஜ், தான் செய்த குற்றத்தை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். அறிவியல் தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து வழக்கை விசாரித்து வருகின்றனர். காதலித்து கரம்பிடித்த ஜோடிக்குள் ஏற்பட்ட சிறு தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in