LATEST NEWS
“திமுகவின் மாஸ்டர் மைண்ட் இதுதான்..” சிடிஆர் நிர்மல் குமார் கொளுத்திப் போட்ட புது குண்டு… அரசியலில் திடீர் பூகம்பம்..!!!
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலின் போது, ஆளுங்கட்சியான திமுக நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் CTR நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் லாபத்திற்காகவும், சில மாநிலங்களின் செல்வாக்கை உயர்த்தவுமே மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வருகிறது என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமைகளையும் மாநில உரிமைகளையும் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து இதனை எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்கு, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் தொகையைக் காரணியாக வைத்து நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், தமிழகத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கை கணிசமாகக் குறையும் அபாயம் உள்ளது. இது மத்திய அரசில் தென்னக மாநிலங்களின் குரலையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பலவீனப்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
