“திமுக ஆட்சியில் தூங்கி கொண்டிருந்தார்களா…?” எதிர்க்கட்சியை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ரமேஷ்.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுக ஆட்சியில் தூங்கி கொண்டிருந்தார்களா…?” எதிர்க்கட்சியை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ரமேஷ்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அதன் சொத்துகள் முறைகேடாகக் கைமாறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் கைமாறிய விவகாரத்தில், கடந்த திமுக அரசு எந்தவிதக் கண்டிப்பான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்துவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ரமேஷ் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ‘முந்தைய திமுக ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா?’ எனக் காட்டமாக கேள்வி எழுப்பினார். ஆன்மீகச் சொத்துக்களையும் கோயில் நிலங்களையும் பாதுகாப்பதில் முந்தைய அரசு முற்றிலும் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், தற்போதைய தவெக அரசு இந்த விவகாரத்தில் அதிரடியாகச் செயல்பட்டு, முறைகேட்டில் தொடர்புடைய 19 பேர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் விவகாரம் மட்டுமின்றி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில முறைகேடு விவகாரத்திலும் தவெக அரசு உடனுக்குடன் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஆன்மீக ஸ்தலங்களின் சொத்துக்களை மீட்டெடுப்பதில் தங்களது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in