“அம்மா இல்ல அப்பா மட்டும் தனியா இருப்பாரு” 80 வயது தந்தையின் ஆசையை நிறைவேற்ற ..கைநிறைய சம்பளம் தந்த வேலையை விட்ட மகன்.. முதன்முறையாக விமானத்தில்.. தந்தை – மகன் பாசப்போராட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா இல்ல அப்பா மட்டும் தனியா இருப்பாரு” 80 வயது தந்தையின் ஆசையை நிறைவேற்ற ..கைநிறைய சம்பளம் தந்த வேலையை விட்ட மகன்.. முதன்முறையாக விமானத்தில்.. தந்தை – மகன் பாசப்போராட்டம்..!!

Published

on

ஸ்ரீகாந்த் பாண்டே என்ற இளைஞர், புற்றுநோயால் தனது தாயை இழந்த பிறகு, வீட்டில் தனியாக இருந்த தனது 80 வயது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக நல்ல சம்பளத்தில் இருந்த தனது தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்தார். வாழ்க்கை மிகக் குறுகியது என்பதை உணர்ந்த அவர், தான் நேசிக்கும் தந்தையுடன் நேரத்தைச் செலவிட முடிவு செய்து, இதுவரை விமானத்தில் பயணிக்காத அவரது ஆசையை நிறைவேற்றத் திட்டமிட்டார்.

தன் தந்தையை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் சென்ற ஸ்ரீகாந்த் பாண்டே, அந்த நெகிழ்ச்சியான தருணங்களை வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவரது 80 வயது தந்தை விமானத்தின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து வெளியில் உள்ள காட்சிகளை ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்து ரசிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

இந்த தந்தை – மகன் பாசப் பயண வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும், “தங்கள் பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தங்களின் கனவை இது நினைவூட்டுவதாக”க் கூறியும், 80 வயதிலும் விமான ஊழியர்களுக்கு அந்தத் தந்தை காட்டிய மரியாதையைப் பாராட்டியும் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in