LATEST NEWS
3 வருட கள்ளக்காதல்… மார்பில் பாய்ந்த கத்தி…நடுரோட்டில் நடந்த கொடூரம்…அடிக்கடி செல்போன் பேசியதே காரணமா? துணிக்கடை பெண் ரேவதியின் கொலையில் இருக்கும் திடுக்கிடும் பின்னணி…!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கனுபர்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது ரேவதி என்ற பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தனது இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக அருகில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைக்குச் சென்ற ரேவதிக்கு, அங்குள்ள ஸ்ரீகாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், ரேவதி அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ரேவதியின் இந்த செல்போன் பழக்கத்தால் ஸ்ரீகாந்திற்கு அவர் மீது கடுமையான நடத்தை சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததால், ஸ்ரீகாந்துடன் பேசுவதை ரேவதி படிப்படியாகத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மே 9-ஆம் தேதி மதியம் காவலாளியாக வேலை பார்க்கும் தனது தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்திற்குப் பெட்ரோல் போடுவதற்காக ரேவதி சென்றுள்ளார். அப்போது அவரை வழியிலேயே மறித்த ஸ்ரீகாந்த், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேவதியின் மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொடூர சம்பவத்தை அடுத்து ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ரேவதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை வழக்கு குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தப்பியோடிய ஸ்ரீகாந்தைத் தேடி வருகின்றனர். மேலும், இந்த கொடூரக் கொலையில் ஸ்ரீகாந்தின் தாய்க்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் மற்றும் சந்தேகத்தின் காரணமாகக் காதலியைக் காதலனே குத்திக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
