LATEST NEWS
“எவ்வளவு சொல்லியும் கேட்கல” மனைவிக்கு 25 வயது வாலிபருடன் தொடர்பு… தன்னை அவமானப்படுத்தியதால்… இரவோடு இரவாக கணவன் எடுத்த கொடூர முடிவு.. போலீஸ் விசாரணையில் அம்பலம்..!!
வேலூர் பேரணாம்பட்டு அருகே 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தனலட்சுமி (36) என்ற பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் அவரது கணவர் விஜயகுமார் (48) என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தனலட்சுமிக்கும் குமரேசன் (25) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதனை கணவர் விஜயகுமார் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், தனலட்சுமி தன் நடத்தையை மாற்றிக்கொள்ளாமல் கணவரை அவமானப்படுத்தியதால் ஆத்திரமடைந்த விஜயகுமார், அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு உடலை மறைத்துள்ளார்.
மனைவி காணாமல் போனது குறித்து எழுந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், விஜயகுமார் தனது மனைவியைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
