LATEST NEWS
“3 நாள் லீவு கேட்டது குத்தமா?.. ஐடி நிறுவன வாசலில் பெண் இன்ஜினியரின் அதிரடி தர்ணா.. இணையத்தில் தீயாய் பரவும் பரபரப்பு வீடியோ..!!
ஹைதராபாத்தில் உள்ள டெக் மகேந்திரா நிறுவனத்தின் முன், தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மூன்று நாட்கள் விடுப்பு கேட்டதற்காகத் தன்னை அநியாயமாக வேலையைவிட்டு நீக்கிவிட்டதாகக் கூறி பவானா என்ற பெண் ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
టెక్ మహీంద్రా’లో భావన ధర్నా
HYD: అనారోగ్యంతో ఉన్న బిడ్డ కోసం మూడు రోజులు సెలవు అడిగినందుకు టెక్ మహీంద్రా కంపెనీ తనను అకారణంగా ఉద్యోగం నుంచి తొలగించిందని భావన ఆరోపించారు. కంపెనీ ఎదుట ధర్నాకు దిగి తనకు న్యాయం చేయాలని డిమాండ్ చేశారు. పోలీసులు ఆమెను శాంతింపజేసేందుకు… pic.twitter.com/suQqAguKui— ChotaNews App (@ChotaNewsApp) July 23, 2026
பெற்றோரின் அவசரத் தேவைகளையும் மனிதாபிமான அடிப்படையிலான விடுப்பு கோரிக்கைகளையும் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற விவாதத்தை இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பாக ஏற்படுத்தியுள்ளது. பவானாவின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியதுடன், கார்ப்பரேட் நிறுவனங்களின் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
